நான் சிந்தகி
நான்
எழுத துடிக்கும்
கவிதையாக நீ
நானும்
எனது அறையும்
எங்களது தனிமையும்
உனது நினைவுகளும் மட்டுமே
எனது வாழ்வனைத்தும்...!
ஒரு மழைக்கால
ரயில் பயணமாக
நீயும் நானும்
பயணமாக நீ
தேடலாக நான்.
உனக்கு
குழந்தைகள் பிடிக்கும்
ஆனால் நீதான் குழந்தை
எனக்கு
பேச விரும்பி
மௌனமாகிறேன்
நீ பேசிக்கொண்டிருப்பதால்
நீ என் உயிர்
நான் உன் காதல்
நாம் கடவுளின் நினைவுகள் ....
பல கண்டங்கள் கடந்து
தூரதேசங்கள் தேடி
உன்னை அடைந்துவிடுவேன்
நிச்சயமாக
உன்னை அழகாக
காண்பிக்க விரும்பி
காத்திருக்கிறது
எனது கண்ணாடியின்
பாதரசம்.
சிந்தகி
பிரிய விரும்பும்
அன்பே
காதல் பரிசாக
பிரிந்துவிடுவோம்.
உன்னை என்னிடமிருந்து
எடுத்துக்கொள்வேன்
இது நீயும் நானுமற்ற
காதல் பிரபஞ்சம்,
உனக்கு எதற்கு கவிதை ?
நீயே .....!
இப்படிக்கு
நாம் ,,,,,,!