ஜல்லிக்கட்டு - தமிழ் காளையர்
சங்கே முழங்கு !
தமிழ் சங்கே முழங்கு!!
தமிழன் என்றொரு இனமுண்டு !
அவன் தரணி தோன்றிய
காலம் தொட்டு வாழ்ந்த
வரலாறும் இங்குண்டு!!
உழவுக்கும், தொழிலுக்கும்
வந்தனை செய்வோமடி
நாங்கள்!
உழவுக்கு உயிரான
காளைகளையா
நாங்கள் நிந்தனை செய்வோம்!!
காளை எல்லாம்
எங்க வீட்டு செல்லப்பிள்ளை!
கொஞ்சம் முட்டிக்கொள்ளும்
விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு!!
திமில் திமிறி வாடி வழியே
வரும் காளை !
அதன் திமிர் அடக்க பாயுமம்மா
எம் தமிழ் காளை(யர்)!!
கொம்பு வச்ச சிங்கமென
சீரிவரும் காளை !🐂
நெஞ்சு நிமிர்த்தி
நேர் எதிர்கொள்ளும்
எம் தமிழ் காளை(யர்)!!
கொம்பு சீவி விட்டவறே
நாங்கதானே!
கொஞ்சம் குத்தும்போது குருதிவந்தால் தப்பேது?!!
வீரமும், மானமும்
இரு கண்ணாம்!
அதில் களங்கம் வந்திட விடுவானா?!!!
சிருக சிருக சேரவில்லை
அக்கூட்டம் !
கடகடவென குவிந்ததம்மா கடற்கரையினிலே!!
தடை! தடை! என ஆயிரம்
இடையூறு வந்தாலும்!
உடை! உடை! என உடைத்தோமே
ஓர் கையாய் !!
குருதி கொதித்து!
குரல்வளை கிழிய!!
ஒலித்தோமே ஓர் குரலாய்!!! "
வாடி வாசல் திறவாமல்
வீடு வாசல் செல்லமாட்டோம்"
சாதி,மதம்,பேதம் எல்லாம் உடைத்தோமே!
தமிழனென்ற ஓர் இனமாய் திரண்டோமே!!
அறவழியாய் போராடிய போராட்டம்..
சில சதிகாரர்களால் திசை மற்றப்பட்டதுவே!!!
வெற்றி கிட்டியும் சந்தோசம் எமக்கில்லை..
எம் தமிழனெல்லாம் தாக்கப்பட்டதான் காரணத்தினாலே...
சீறி பாய சில கணம் போதும் என்றாலும்
அறப்போராட்டம் என்பதாலே விட்டுவிட்டோம்...
தமிழ் மொழியை
அழித்து விட முடியாது
என்பதற்கு
ஹிந்தி எழுச்சி போராட்டம்..
தமிழனின் வீரத்தை வீழ்த்திவிட முடியாது என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம்...
நடக்கட்டும் ஜல்லிக்கட்டு!
நம் காளை(யர்) எல்லாம்!!
வரட்டும் துள்ளிக்கிட்டு!!!