நிலவு தேய்வதில்லை --- குறுங்கவிதை
நிலவுந்தான் தேய்வதில்லை
நித்தியமாய் நம்பிடுவோம் !
மலருந்தான் வாசமதை
மகிழ்ச்சியுடன் பரப்பிடுமே !
உலராத மனமெங்கும்
உறவாடும் மழலைக்கும்
நிலவென்றால் ரசிப்பாதற்கே !
நிசமான சொந்தமன்றோ !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்