இது காதலா
இது காதலா
பார்த்து சிரித்தாள்
பரவசத்தில் நான்
பறக்க ......
எனை பார்த்தாள்
எதிர் பார்க்கிறாள்
எனை என சிலிர்த்தேன்
நான் .....
நலம் விசாரித்தாள்
நாளும் எனை பற்றி என்
நண்பனிடம்
இனி அவளை பற்றி நானும்
என் நண்பனிடம் நச்சரித்தேன் .....
ஒரு வேலை
இது காதலா என
நினைத்த நான்
இது ஒரு வேலையா
என சிந்திக்காமல் தோற்றுப்போனேன்
என் காதலில்
எப்படி ?
பார்த்து சிரித்தாள்
பழகிய முகம் போல்
இருக்கிறதே என்று .
எனை பார்த்தாள்
எதிர்ச்சியாக
எதிரில் தினமும் நின்றதால் .
நலம் விசாரித்தாள் என்
நண்பனின் தோழி அவள்
என்னையும் ஒரு மரியாதைக்கு .
இதையெல்லாம் சிந்திக்காத
நான் அவள் அழகில் மயங்கி
மனம் உடைந்து நின்றேன்
காதலில் தோற்று .