கவியே உன்னில் காமம்
உன்னோடு உறவாடி கலக்க
உள்ளம் தோறும் கொள்ளை ஆசை
உனை தீட்டி ஸ்பரிசம் கொள்ள
விரல் தனுக்கு தீரா காதல்
ஒவ்வொரு அடியாய் உனை நான் ரசிக்க
விழி இரண்டிலும் காதல் ஏக்கம்
உனை செவித்து மோகம்தனை தீர்க்க
செவி முழுதாய் பொல்லா காமம்
முரணென்ற முன்னழகை முதற்சீரில் பாட
இதழ் தோறும் இச்சை எண்ணம்
இன்னும் கோடி மிச்சமுண்டு
கவியே உனை படைத்தல் போது
நானும் சிறிதாய் செருத்தலுண்டு
உனை படைத்து முடித்து படித்தல்போது
$வினோ...