கணினி வலை
கவிதை
மண் பிசைத்து விளையாடிய பிஞ்சு விரல்கள்
மணிக்கணக்காய் கணினி முன் விளையாடுது பாருங்கள்
மண் வாசம் மறந்து மனம் மடிக்கனிணி வசமானது பாருங்கள்
விரல் நடுங்கும் பின் விழி மங்கும் இதை நாளும் உணருங்கள்
கைபேசியோ கணிப்பொறியோ அதை விடுத்து நித்தம் நீங்கள் விளையாடுங்கள்
உடல் வாகு நல் வலுவாக ஓடியாடி விளையாடுங்கள் .