ஆசை முத்தம் தாராயோ - வஞ்சி விருத்தம்

ஆசை முத்தம் தாராயோ


அன்னை உன்னை வணங்குவதில்
அகமும் முகமும் மலர்கின்றேன் .
ஆசை முத்தம் தருவாயோ
அகிலம் அறியச் செய்வாயோ !


அன்பும் பண்பும் புகட்டுகின்றாய்
அன்னை உன்னை என்றும்நான்
மறவா நிலையை எனக்கருள
மன்றில் உன்னை வேண்டுகின்றேன் .


நன்றி பலநாள் கூறிடினும்
நயந்தே நானும் நடந்திடினும்
நேயம் கொண்டு எனைவளர்த்த
நேசந் தனக்கு ஈடாமோ ?


உந்தன் அன்பு கிட்டிடிலோ
உயரும் எந்தன் வாழ்வுமன்றோ ?
இமயம் கூட எட்டிவிடும் .
இயல்பும் எனக்கு வாய்த்துவிடும்.


உதிரந் தன்னை உணவாக்கி
உண்மை அன்பை உணர்வாக்கி
உதிரா வண்ணம் வளர்த்தென்னை
உலகம் அறிய செய்திட்டாய் .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Apr-17, 12:29 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 64

மேலே