ஹைக்கூக்கள்

அம்மா தந்தாள் முத்தம்
மொழியில்லாத கவிதை வரிகள்
------ பாசம்


தந்தையை அரவணைக்கும் மகன்
ஊன்றுகோல் வேண்டாம் இனி
------ முதியோர்இல்லம் .


பாடம் புகட்டுகின்றாள் தாய் .
படிக்கும் இல்லத்தில் குழந்தை .
------ பள்ளிக்கட்டணம் .


உழைப்பில் நிற்கும் மனிதன்
விலை பேசப்படும் விளைநிலங்கள்
------- தற்கொலைகள்


பயணச் செலவில் இன்று
தொலையத் துடிக்கும் மனிதர்கள்
------ எதிர்காலம் .


நடக்கும் பாதங்கள் தரையில்
நடனம் பார்க்கும் சமுதாயம்
----- கால்கொலுசு .


அழிவில் வரையும் படங்கள்
தேடும் மனிதயினம் சோகத்தில்
----- வாழ்க்கை .


மக்கள் தொகையின் பெருக்கத்தில்
நிற்க இடமில்லை உலகத்தில்
----- சுமைதாங்கி .


ஐந்தறிவும் ஆறறிவும் ஒன்றானது
இயற்கையின் சீற்றம் தள்ளாடும்
------- உயிரினங்கள் .


இலையில் சோறு போட்டால்
இல்லாதவரையும் நினைத்துப் பார்
------ வறுமை .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Apr-17, 1:16 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 94

மேலே