பாட்டுக்குள்ள
இசைப்பாடல்
பாட்டுக்குள்ள என்னடா பேதம் - அந்தப்
பாட்டுதான் மனுஷன் வேதம்
நாட்டுக்குள்ள எத்தனையோ
பாட்டிருக்கு தம்பீ
நல்ல பாட்ட நீபாடு !
நாலுபேருக் கில்லாம
நாலாயிரம் பேரு
நல்லாக் கேட்கத் தமிழ்பாடு ! (பாட்டுக்குள்ள)
சோகப் பாட்டா
இருந்தாலும் கூட
சொந்தப் பாட்ட நீபாடு !
ராகம் தாளம்
நமக்கேது ? போடா
ராவும் பகலும் தமிழ்ப்பாடு ! (பாட்டுக்குள்ள)
காதலத்தான் பாட்டுக்குள்ள
கட்டிவெச்சுப் பாரு
கவித ஊத்தும் தேனாக !
கால நேரம் பாக்காம
பாட்டெடுத்து பாடு !
கவிஞன் ஆகுவ தானாக ! (பாட்டுக்குள்ள)
பின்குறிப்பு : நண்பன் ஒருவனும் நானும் சேர்ந்து ஏதோ பாடிக்கொண்டிருக்கும் போது இன்னொருவன் "நீ என்னடா கவிஞன்.... இந்த மாதிரி எல்லாம் பாடுற" என்று கேட்டான்...அதற்கு அவனிடம் சொன்ன
மறுமொழி (பாடலாக).....