அவர் வருவாரா

தனிமையில் வாடும் என்னை
தழுவி அணைக்க வந்த
மோகக் காற்றே
உன் மோசம் தவிர்
அவர் காலடி ஓசைக்காய்
தினமும் காத்திருக்கிறாள்
இந்த பெண்மான் என
உடன் போய்
அவர் காதில் சொல்லு
வாடிய என் நெஞ்சின் சோகங்களை
அவர் வரும் பாதை நோக்கி
உன் மீது தலை வைத்துத் தானே
ஒவொரு நாழும் பகர்ந்தேன்
என்னுயிர்த் தோளியாய்
என் வீட்டு வாசல் கதவே
அவர் வந்தால் சொல்வாயா
என்னுயிரே ஏங்குகிறேன் நான்
எப்போது வருவீர்கள்
தழுவல் போட்டியில்
என்னை வீழ்த்த
முரட்டு சக்ராயுதம் ஏந்தி
ஆக்கம்
அஷ்ரப் அலி