காதல் உறவாட

காத்திருந்த காலமெல்லாம் வீனாக போகுமோ
கன்னியவள் வார்த்தை தேனாக மாறுமோ
காதல் மடை திறந்து வருவாளா
கற்பனை நடை தந்து விடுவாளா

கண்களின் தோரனை அவளை தேடுகின்றது
கன்னியவள் வந்தால் வார்த்தை சாவுகின்றது
கனநேரம் கூட என்னவளின் சிந்தனை
கானும் நிகழ்வெல்லாம் என்னவள் என்பதனை

கட்டும் ஆடையெல்லாம் என்னாடை வண்ணம் போலவே
காட்டும் பார்வையெல்லாம் நான் கொண்ட ஆசையை சொல்லவே
கட்டற்ற கூந்தலோடு நடமிடுவாள்
களிப்பற்ற அழகோடு வடமிடுவாள்

கடறீட்டு காதல் பத்திரம் தருவேனே
கட்டியம் தவறாமல் உன்னுடன் இருப்பேனே
காதல் தோற்றம் கொண்டு வருவாயா
கண்டும் கானாமல் எனக்கென்று திரிவாயா

காய்ந்த நிலம்போல நான் இருக்கின்றேன்
கனலில் வெந்து கனமும் தவிக்கின்றேன்
காலத்தோடு காதல் உறவாட வருவாளா
காலந்தோறும் தனிமையில் காதல்செய்ய விடுவாளா.

எழுதியவர் : கதிர் (22-Apr-17, 11:48 am)
சேர்த்தது : கதிர்
Tanglish : kaadhal uravaada
பார்வை : 162

மேலே