கிறுக்கல் கிறுக்கி உனக்கு

கவிதைகளுக்கென்று பெரிதாய் ஒன்றும் மெனக்கெடுவதில்லை !
உன் அழகை கொஞ்சம்
உன் அன்பை கொஞ்சம்
உன் இதழ்களை கொஞ்சம்
உன் பார்வைகளை கொஞ்சம்
உன் நினைவுகளை கொஞ்சம்
உன் பிரியத்தை கொஞ்சம்
அப்படியும் இப்படியுமாய்
சொற்களை இடம்மாற்றி
என் அறிவுக்கு எட்டிய தமிழை கொண்டு
கிறுக்கி ...
கிறுக்கி உனக்கு அனுப்பிவிடுகிறேன் !
ஆதலால் நீ எனக்கு
அள்ள அள்ள குறையாத
"காதல்" தருகிறாய் என்பதற்காய் !