ராமு-சோமு உரையாடல் தமிழ் பெயர் வைப்பதில்லையே குறித்து
ராமு : இன்றைய இளைய சமுதாயத்தினர் தங்கள்
குழந்தைகளுக்கு பிடிவாதமாய் சமஸ்க்ரித
பெயர்களே வைக்கிறார்கள்; என் என்று கேட்டால்
அவை காதுக்கு ரம்மியமாய் இருப்பதாய் கூறுகிறார்கள்
இதைப்பற்றி உன் கண்ணோட்டம் என்ன தெரிஞ்சிக்கலாமா
கொஞ்சம் சொல்லு பார்ப்போம் சோமு .
சோமு : ஐயா இதப்பத்தி சொல்லறத்துக்கு முன்னே ஒன்னு
சொல்ல விரும்பறேன்; முதல் ல பிழை இல்லாமல்
தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க பல பேருக்கு
பெரும்பாடு; ழ வை ல என்றே இவர்கள் நாக்கு
பழகிவிட்டது ............. பழக்கம் இவர்களுக்கு பலக்கம் !
சரி பெயருக்கு வருவோம்-ஐயா தமிழில் இல்லாத பெயர்களா .....
அநேக ஆயிர பெயர்கள் உண்டு இவற்றைப் பற்றி இவர்கள்
தெரிந்துகொள்வதும் இல்லை , விரும்புவதும் இல்லை ;
கலைவாணி அழகான தமிழ் பெயர்.. சரஸ்வதி தேவிக்கு
இலக்குமி , லட்சுமி தேவிக்கு - சரஸ்வதி, லட்சுமி என்று
பெயர் வைப்பார்கள் ஆனால் கலைவாணி, இலக்குமி
என்றல்ல; கேட்டால் அவை கர்னாடக பெயர்களாம் !
அதிலேயே தவறு சேர்கிறார்கள்-ஐயா தமிழ்ப்பெயரை
கர்நாடகம் என்கிறார்களே !...............!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம் தமிழ்நாட்டை தவிர இதர மாநில மக்கள் அவர்கள்
தாய் மொழி மீது அபரிமிதமான பிரியம் கொண்டவர்கள்......
வங்காளம்,ஒடிசா ,உத்தர பிரதேசம்,பஞ்சாப் இங்கெல்லாம்
பெயரகள் அவர்கள் மொழிப பெயர்களே !............
நாம் பத்தாம் பசலி ஆகவே காலம் நகர்த்துகிறோம்........
ராமு : டேய் சோமு உன்னுள் இத்தனை ஞானம் இருப்பது
என்னை திகைக்கவைக்கிறது .....................
சோமு : ஹீ ................ஹீ ...................... ஐயா ......................