நீண்ட நாள் ஆசை

நீண்ட நாள் ஆசை தான்
கவிதை எழுத....
இதுவரை எழுதியதில்லை
இப்பொழுது எழுத துடித்தன
எனது கைகள்......
என்னவளை பார்த்த சந்தோஷத்தில் தான்
அவளை நினைத்தேன்
பிறந்தது கவிதை
எழுதி முடித்தேன்
வாசித்துப் பார்த்தேன்
நம்ப முடியாமல் வியந்தேன்
என்னாலும் இப்படி அழகாக எழுத முடிந்ததேயென்று...
மறுநாள்-
சந்தித்தேன் அவளை
நீட்டினேன் கவிதையை
வாங்கினாள்
படித்தாள்
சிரித்தாள்
எழுதுகோலை எடுத்தாள்
ஆங்காங்கே வட்டமிட்டாள்
என்னிடம் நீட்டினாள்....
புரியாமல் பார்த்தேன்
புன்னகையோடு கூறினாள்
ஆங்காங்கே சிறு எழுத்துப்பிழை
அதையும் திருத்திக் கொண்டாள்
கவிதை அருமை என்று....
அப்பொழுது தான் புரிந்தது
அவள் தமிழ் ஆசிரியை என்று.....!