விடியாத காலை முடியாத இரவுகள்


அந்த மலைமுகட்டில் நதிக்கரையில்
மாளிகை வாசலில் விடியும் காலையே !
இந்த ஏழையின் குடிசை விதிவிலக்கா ?

விடியாத காலையும் முடியாத இரவுக்களும்தான்
ஏழைக்கு இரவு சுதந்திரம் தந்த பரிசா ?

சோகங்களே சொந்தங்கள் பசியும் பட்டினியும் உறவுகள்
இங்கே தரித்திரம் ஒரு சரித்திரம் எழுதிகொண்டிருக்கிறது
பாரத மாதா சலாம் பாரதகொடியே சலாம்
பாரத மக்களே சலாம்
ஏழைக்கு சலாம் இரவுக்கு சலாம்
இரவில் வந்த சுதந்திரமே சலாம்
ஜன கண மண.......
விழா முடிந்து விட்டது தோழர்களே!
இன்னுமா விடியவில்லை ?
விடியும்போது விடியட்டும்

விழியில் நீரேந்தி விடிய காத்திருப்பார்கள்
அறுபது ஆண்டுகள் என்ன அறுநூறு ஆண்டுகள்
காத்திருப்பார்கள்

.

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-11, 1:23 am)
பார்வை : 517

மேலே