விடை எங்கே
தலைவர் உத்ம புத்திரன்
வாழ்க!
தலைலவர் உத்தம புத்ரிரன்
வாழ்க!
வணக்கம் தலைவரே!
வணக்கம் !
வாங்க உட்காருங்க.
நாளைக்கு பிறந்த நாளுக்கு கட்அவுட்எல்லாம் ரெடியா யா.
நாங்க எங்க எரியாவுல ரெடி பண்ணிவிட்டோம் தலைவரே.
நாங்களும் தான் தலைவரே!
தலைவர் மனதில் பொன்சிரிப்பு பைசா செலவு நமக்கு இல்லை என நினைத்து கொண்டு சரிங்கப்பா என்றார்.
தொகுதியில இருந்து எல்லாரையும் நம்ம மண்டபத்துக்கு நாளைக்கு வர சொல்லுங்க.
என அமைச்சர் அலுவலகத்தில பேச்சு வார்தை நடக்க விழா ஏற்பாடுகளை இலவசமாகவே தன் அதிகார பலத்தில் ஏற்பாடு செய்தார் அமைச்சர்.
டீரிங்..டீரிங்.. போண் கால் வர அமைச்சர் எடுத்தார்.
ஹாலோ..யாரு..
தலைவரே நம்ம மாரி உங்க கட்அவுட் கட்டும்போது தவறி விழுந்துட்டான்.கால்ல ரொம்ப அடிபட்டு போச்சு.ஆஸ்பிட்டல சேத்துஇருக்கோம்.
சரி நான் வந்து பாக்கேறன்பா..
அன்றுமாலை..
தலைவர் , மாரியை ஆஸ்பித்ரியில் சந்தித்து ஏம்பா மாரி இந்த கட்அவுட் கலாச்சரம் எனக்கு பிடிக்காதுப்பா.
ஏம்பா உனக்கு இந்த வீண் வேலை.
சரி உடம்ப பாத்துக்கோ.
தலைவர் தன் ஆட்களுடன் புறப்பட்டார் வழக்கமான கோஷம் முழங்க.
தலைவர் உத்தம புத்திரன்"வாழ்க"!
மாரி பார்த்தான் .தன் நண்பனிடம் மாரி டேய்
வாய் வார்ததையாலே ஏமாற்றும் தலைவர்கள் நம்ம தலைமுறையும் பார்த்து ஓடி போச்சி.ஒரு பிஸ்கட் பாக்ட்,ஒருபழம்.ஏதுவுமே இல்லாம வந்து போறாரு தலைவர்..
நான் இவருக்காக கொத்தனார் வேலைக்கு போய் என் பணத்த போட்டு கட் அவுட்டும் வெச்சி கால ஒடுச்சிகின.
அவருக்கு சாதரணமா போச்சிடா என் காலு.
நாளைக்கு வேணா பாரு வர பொண்ணாடை ,பழம் இது எல்லாம் திரும்பவும் கடைக்கு போய்யிடும்.
இவங்க விளம்பரத்துக்கும்,இவங்க வந்து நின்னா சுத்தி பத்து பேரு நிக்க ஆள் வேணும் டா!
டேய் மச்சான் இவங்கள நம்பனா முடியாதுடா.
அரசியல் வரலாறுல ஊழல்ல இடம் பிடிக்காத ஒரு ஆள பாக்க முடியல டா இப்போ!
சாதரணமா பொறந்து கோடீஸ்வரனாக மாறியும் பத்து ரூபா செலவு பண்ண மனசு இல்ல நம்ம உத்தம புத்திரன் அமைச்சர் ஐயாவுக்கு.
இவங்கள நம்பனா அவ்வளவுதான் டா
நம்ப உழைப்ப நம்பி வாழனும்டா.
சரி மச்சான் என்றான் தன் நண்பன் சுரேஷ்.
வேற அமைச்சர் அந்த தொகுதியில ஜெயித்து வர அங்கேயும் ஊனமுற்றோர் வேலைக்கான விண்ணப்பத்துடன் ஏறி இறங்கினான் மாரி.
அரசியல்வாதிங்களே இப்படித்தான்
என முனுமுனுத்தான். சமூக சேவை அமைப்பு கொடுத்த மூன்று சக்ர சைக்கிளை கையால் ஓட்டிவந்தான் மாரி.
என்றுதான் விடியும் இந்த வாழ்க்கை என அவன் மனதில் வருத்தம் கண்ணீருடன்அவன் அழுதான்.
எந்த அமைச்சரும் அவன் வலியை புரிந்து கொள்ள முடியவில்லை!
இப்படித்தான் ஓடுகிறது வாழ்க்கை இதற்கெல்லாம் விடை எங்கே என யோசித்து கொண்டே மாரியின் நண்பன் மூன்று சக்ர சைக்கிளின் பின் புறம் வந்து கொண்டிருந்தான்.

