பயணம்
குயில் கூவும் இளங்காலை பொழுது தலையில் நீர் சுமந்து சென்றாள் தாரா. பதினாறு வயதே நிரம்பிய புள்ளிமான்குட்டி அவள். மீனை போன்ற விழிகளையும் செவ்விய இதழையும் கொண்டவள்.
சோலைகிராமத்தில் வெயில் காலமென்றால் தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிடும்.
தண்ணீர் சுமந்து செல்லும் பெண்களை வழியெங்கும் அவ்வூரில் காணலாம்.
இதை மனதில் கொண்டு மாணிக்கம் தாராவிற்கு திருமணத்தை விரைவில் முடிக்க நினைத்தார் அவள் தந்தை மாணிக்கம்.
தாரா அப்பொழுதுதான் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு முடித்திருந்தாள். அதற்குள் அவளின் திருமணத்தை முடிக்க நினைக்கிறார் மாணிக்கம். அவருக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைத்தான் உலகில் இல்லாதவனைப்போல். ஆனால் தாராவிடம் சம்மதம் ஏதும் கேட்க்காமல் அவளின் திருமணத்தை முடிவு செய்தார் மாணிக்கம். ஆனால் அவளின் வயதையும் பிற்காலத்தையும் நினைவில் நிறுத்த மறந்தது விதி அன்றி வேறு ஏது.
அப்பா எனக்கு படிக்க வேண்டும் தயவு செய்து என்னை படிக்க விடுங்கள். தந்தை மாணிக்கத்திடம் மன்றாடினாள் தாரா. ஒழுங்காக நான் சொல்வதை கேட்டு திருமணத்திற்கு ஒத்துழை அவ்வளவுதான். விரைவில் திருமணத்தை முடிவும் செய்து முடித்தும் வைத்தார்.
முதலிரவில் அறைக்கு சென்ற தாராவிற்கு விருப்பமில்லாத திருமணத்தில் இன்னும் அவ்வறையில் நடக்கும் சடங்கில் இருந்து தப்பிக்கும் மார்க்கம் கிடைக்காததால் வேறு வழி இன்றி மனதில் அமைதி இல்லாமல் நின்றாள்.
அவள் கணவனாக வந்த நானா அவளை ஒரு மிருக பசியுடன் நெருங்கினான். அந்த நேரம் அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. அதை பார்த்த தாராவிற்கு ஏது செய்ய புரியாமல் நின்றாள். ஆனால் அவன் செரியானவுடன் அவளிடம் மிருகமாக நடந்து கொண்டான். அதை அவளால் தாங்க முடியாமல் எப்பொழுது விடியும் என்று காத்து கிடந்தாள்.
நானாவின் உடல் உபாதையை யாரிடமும் சொல்ல முடியாமல் அவளின் வாழ்க்கையை நினைத்து மனதில் தைரியம் இழந்தவள் போல ஆனால் தாரா. தந்தை தாயை மனதில் இருத்தி எல்லாவற்றையும் பொறுத்து போகும் நிலைக்கு ஆளானால்.
மாமியார் இல்லாத மாமனார் எவ்வாறு இருப்பார் என்பது தெரியாமல் கணவனுடன் புக்ககம் சென்றால். அவளுடன் தனது நாத்தனாரும் இருப்பார் என்றார்கள் நல்லது என்று நினைத்தாள். ஆனால் அடுத்த இரண்டொரு நாட்களில் அவர்களின் குணம் தெரிய அவள் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள்.
மாமனார் மருமகளை மகளாக பார்க்காவிடினும் மகனின் தாரமென்று கூட பார்க்காமல் தனது தாரமாக பார்க்க நினைத்தார். அவரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள தாரா மிகவும் போராட வேண்டி இருந்தது மேலும் கணவனின் துணையும் அவளுக்கு கிடைக்காமலும் அவன் தனது தந்தைக்கு ஆதரவாக மாறியதுதான் கொடுமையாக போனது.
அதனின்று அவள் தன்னை எவ்வாறு காத்துக்கொண்டாள் .........