என் காதல் எல்லாம் நீ

வெயிலோடு பகல்
பகலோடு இரவு ,,,

கடலோடு நதி
நதியோடு நாணல் ,,,

கோயிலோடு கோபுரம்
கோபுரத்தோடு குயில்,,,

மழையோடு முகில்
முகிலொடு தென்றல் ,,,

நிஜங்களோடு நினைவு
நினைவுகளோடு நீ ,,,

இமையோடு பார்வை
பார்வை எல்லாம் நீ ,,,

விழியோடு தேடல்
தேடல் எல்லாம் நீ ,,,

சுவாசம் அது காற்றில்
காற்றினுள்ளும் உன் வாசம் ,,,

இதழோடு வார்த்தை
வார்த்தை எல்லாம் உன் வசம்,,,

என் எழுத்து எல்லாம் கவி
என் கவி எல்லாம் நீ ,,,

என்னோடு மட்டும் உன் காதல்
என் காதல் எல்லாம் நீ ,,, நீ மட்டும் ........

எழுதியவர் : வான்மதிகோபால் (1-Jun-17, 7:19 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 213

மேலே