பிறந்தநாள் வாழத்துக்கள் கார்த்தி
சுருட்ட முடி தலைய
தெரட்டி பிடிச்சு உலுக்க
வெரட்டி வர்றா ஓருத்தி
கறுத்த பய மொகத்த
அனிச்சல் தேச்சு வெளுக்க
தொறத்தி வர்றா ஒருத்தி
அழுக்கு துணி சட்டைய
அழுத்தி புடிச்ச புடியில
அடக்கி புட்டா ஒருத்தி
பொத்தி வளத்த புள்ளய
கத்தி கதற வுட்டுட்டு
சுத்தி நின்னு அடிக்குதுங்க
கண்ணு படாத எடத்துல
கள்ள தனமா காயமொண்ணு
கண்ண சிமிட்டி சிரிக்குது
நெனப்புக்காக நெழற்படம் ஒண்ணு
இனிப்புக்காக அனிச்சல் ஒண்ணு
பகட்டுக்காக பரிசுபொட்டலம் ஒண்ணு
கோபியர் கோடிபேர் புடைசூழ
கோலாகல கொண்டாட்டம் முடிந்தது
கோமகன் பிறந்தநாளின்று