நட்பு

கலி முற்றி ஒரு கால்
உண்ணும் உணவிற்கு
'ரேஷன் ' வரலாம்
நபருக்கு ஒரு கவளம்
சாப்பாடு என்றும் வரலாம்
நட்பின் சிகரம் என் நண்பன்
அப்போதும் எனக்கு
ஒரு கவளம் சாப்பாடு போதாது
என்று தனக்கு வந்த கவள சோற்றை
எனக்கே தந்திடுவான் -நான்
உண்பதை கண்டு மெத்த
மகிழ்ச்சி அடைவான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jun-17, 1:02 pm)
Tanglish : natpu
பார்வை : 576

மேலே