மண் வாசம்

வான் மகள் அழுகிறாள் ...
பூமி செழிக்க ..
ஒற்றை துளி பட்டாலும்
ஊரே மணக்கும்
மண் வாசனை அல்ல மழை வாசனை
கட்டியவன் தான் இங்கே
கால் கடுக்க நின்றாலும்
வெட்டியவன் வீதியில் நிற்க
வேதனையுடன் மழை சொன்னது
மரம் வெட்டாதே என்று ..
வெச்ச மரம் தாங்கி நிக்க
வேர் பிடிச்சு காய் பிடிக்க
வெள்ளாமை வந்து செழிக்க
வெள்ளி வெள்ளி யா மழை நனைக்க
வீசுதடா மண் வாசம் ...

எழுதியவர் : மழை வாசம் (8-Jun-17, 4:22 am)
சேர்த்தது : சிவா
Tanglish : man vaasam
பார்வை : 259

மேலே