பாவை காளை காதல்
பார்வையும்
பாணமாய் பாயும்!
பாவை எய்தாள்
பார்வையும் காதல்
பாணமாய் பாயும்!
ஒரு காளையைத்
தாக்கிய பாணம்
எய்தவள் பாவை தானே!
பாவையின்
பார்வை பாணக் காதலில்
காளையின் காதல் இணைந்தது.
பாவை நீயும்
காளை நானும்
செய்த காதலுக்கு
பாவை காளை காதல்
என்று கூறியது
உலகம் நேற்று!
பாவை காளை
காதல் இன்று
பாவம் காளை காதல் என்று
கூறுகிறது உலகம் இன்று!
காதலுடன் காளை
எதிரே நின்றபோதும் -காதல்
பார்வையை பாணமாய் வீச
மறதி கொண்டாயோ!
காளை என்
மீது பாவை நீயும்!
பாவை உன் மீது
காளை நானும்!
கொண்ட காதல்
கனவாய் மாறி
வலியாய் நிற்கிறது!
சுழ்நிலையா அல்ல
சூழ்ச்சியா
இந்நிலைக்கு காரணம்!
சொல் பாவையே!
படைப்பு
கவிக்குயவன்
செங்கை -603001
13/06/17