எச்சம்
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் நலிந்து காமம் முற்றியதால் கருவாய் கனிந்த நான் கண் திறக்கும் முன்பே களையறுக்கப்பட்டேன் வேண்டாத பயிரினைப்போல்;
கற்ப்பின் சிறப்பினை அறியாத கயவர்களால் கருவறையில் மட்டும் வாழ்ந்து காணாமல் போனேன்; ஆடைதனை களைவதைப்போல அற்பத்தனமாய் களையப்பட்டு
ஆசையால் திரண்டு அவமனச் சின்னமாகிய நான் உயிரற்ற எச்சங்களாய் உங்கள் கண் முன்னே.