நானொரு சந்நியாசி
காம இரசனை நித்தமும் பாடி அதுவே இல்லறமென்று நீங்களுரைத்தால் நான் சந்நியாச கீதம் பாடுபவனாவேன்...
பெண்ணைத் தீண்டாதவன் ஆண்மகனே இல்லையென்று நீங்கள் கூறினால், அது என்னை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை...
பிரமச்சரியம் உடைக்கப்பட வேண்டியது என்று கருதும் அளவிற்கு இல்லறமொன்றும் சிறந்து விளங்கவில்லை...
எல்லாம் பாலினக்கவர்ச்சியாய் கூடிவிட்டு பிரியும் பொம்மை விளையாட்டைப் போல விளையாடிக்கொண்டு பிரமச்சரியனாக வாழ்வதை இழிந்துரைக்கிறீர்கள்?
நீங்கள் பாடும் காம இரசனைகளை படித்து பாராட்ட கண்மூடிய ஆண்களும், பெண்களும் உங்களைச் சுற்றி இருக்கலாம்...
அதன் பலத்தில் நீங்கள் பிரமச்சரியத்தை இழிந்துரைக்கலாம்...
ஆனால், எமக்கு எக்கூட்டமும் தேவை இல்லை...
உண்மை, அன்பு, சத்தியம், தூய்மை, ஞானம் போன்றவை போதும் இந்த வாழ்வை வாழ...
பிரமச்சரியமென்பது தனது மனம், சொல், செயல் ஆகியவற்றை அடக்கி அன்பாகிய தூய இறைவனிடம் அர்ப்பணிப்பதே தவிர பிறரை இழிந்துரைப்பது அல்ல...
நான் யாரையும் இழிந்துரைக்கவில்லை...
மாறாக எனது உறுதியான விளக்கத்தைத் தருகிறேன்...