யார் சந்நியாசி

சூரியனிடம் எனக்கு ஈடுபாடுண்டு...
காரணம் அவனொரு சிறந்த சந்நியாசி...

தனது ஊனுடலை வளர்க்க யாசித்து உண்ணும் மனிதன் எவ்வாறு சந்நியாசியாவான்?

சூரியன் தன்னலமில்லாது தன்னையே எரித்து அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தையும், ஒளியையும் அகிலத்திற்கே யாசகமாக வழங்குகிறான்...
தானே சிறந்தவன், ஞானம் பெற்றவனென்ற அகங்காரம் அவனிடம் சிறிதும் இல்லை...
தனக்கென்று எதையும் பிறரிடம் அவன் எதிர்பார்ப்பதில்லை...

இயற்கையின் படைப்பில் சூரியனே சந்நியாசம் மேற்கொள்ள சிறந்த உதாரணமாக விளங்குகிறான்...

பிச்சை எடுத்து உண்பதே மாபெரும் குற்றம்...
அதேபோல் பிச்சை எடுப்பவன் தன்னுடைய ஊனுடல் ஆசையிலிருந்து விடுபாடாது சுயநலம் கொண்டே வாழ்கிறான்...

பிரம்மச்சரியம் என்பதில் பிரம்மம் என்றால் முதன்மையான என்றும் சரியம் என்றால் நன்னெறிகளைக் கடைப்பிடித்து வாழுதலென்பதாலும் முதன்மையான நன்னெறியாகிய, உலகிற்கு தனது செயல்களையெல்லாம் அர்ப்பணித்தலே பிரம்மச்சரியம் கொண்டு வாழும் சந்நியாசியின் கடமையாகும்...

தனது ஊனுடலைத் துறக்கும் வரை தனது நன்னெறி செயல்களைத் துறக்க இயலாது என்பதை உணராதவன் சந்நியாசியாக இருக்கமாட்டான்...
சூரியனே இதற்கு சிறந்த விளக்கமாய் விளங்குகிறான்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jun-17, 8:02 am)
பார்வை : 566

மேலே