தந்தையர் தினம்

உங்களுடைய உலகமே
என்னைச் சுற்றித்தான்
என்னுடைய மகிழ்ச்சி
உங்களுடைய மகிழ்ச்சி
என்னுடைய சோகம்
உங்களுக்கும் சோகம்
இப்படி எல்லாவற்றையும்
என்னைச்சுற்றியே உங்களுடைய
உலகம் தீர்மானிக்கப்படுகிறது
உங்களுடைய ஒளிமயமான
உலகிற்கு ஒளியுட்ட வந்த
விளக்காக என்னை சுடர்விட்டு
எரியவிடும் வழிகாட்டியாக
வாழவைக்கும் தெய்வங்களுக்கு
வாழ்த்துக்களும் வந்தனங்களும்

எழுதியவர் : சுமதி (18-Jun-17, 6:49 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : thantaiyar thinam
பார்வை : 88

மேலே