அப்பாவின் மரணம்
தந்தை நம்முடன்
வாழ்ந்த கடவுள்!!
கடவுளுக்குத்தான் தெரியும்
தன் குழந்தைகளுக்கு
ஏது தேவை என்று?
அந்த கடவுள்
நம்மை விட்டு
பிரிந்தால் எங்கு தேடுவது
உண்மையான அன்பை
இறுதி ஊர்வலத்தில் விட்டு
சென்ற கண்ணீர் கலந்த முகம்
கடவுளே உன்னில் நிகழ்ந்த மரணம்
என்னை கொன்று விட்டது..
மறு ஜென்மத்தில்
உனக்கு மகளாக வேண்டும்
அது வரை என் கண்ணீர்
நிற்க்காது...
நீ என்னோடு வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறாய் அப்பா..
என்னை பள்ளிக்கு அழைத்து
சென்ற நாட்கள்..
உன்னோடு பைக்கில் நான் வந்த நாட்கள்..
எங்களுக்காக நீ கட்டிய வீடு
ஆலயமானது
ஆனால் நீ தெய்வமாவாய்
என்று சொல்லவில்லை!!
உன் சட்டை
உன் விஞ்ஞான அறிவு
நீ பயன்படுத்திய பொருள்
வாழ்கிறேன் உன்னோடு
நாங்கள்..
நான் உன்னை காயப்டுத்தியபோது
கண்டுகொள்ளாத அன்பு
தேடினேன் கிடைக்கவில்லை
தெரியாத ஒன்றுஆறுதல்
எனக்கு
மறுஜென்மம் நான் உனக்கு
மகள்..