தந்தையெனும் அகராதி -- மீமொழிக் கவிதை
தந்தையெனும் அகராதி -- மீமொழிக் கவிதை
பிறந்தவர் இறப்பதும்
பூமியில் பிறப்பதும்
இயற்கையின் வழிச்செல்லும்
இயல்பின் நிரந்தரம் !
துறந்தவர் துயில்வதும்
துன்பத்தில் ஆழ்வதும்
மறந்தவர் ரணங்கள்
மாறிடும் உலகினில் !
என்னுயிரைத் தந்த நீயும்
எல்லையில்லா இன்பத்தின்
முன்னுரையைக் கற்பினாலே
முழுவதுமாய்க் கற்றாயே !
பலர்போற்றும் பண்பாளனாய்ப்
பாரினிலே உருவாக்க
பாசத்தால் நேசத்தால்
படிப்பினையைத் தந்தவனே !
சான்றோருக்கு சான்றோனாய்ச்
சாதிக்க வைத்தவனே !
தரணியிலே நின்றாயே
தந்தையாம் அகராதியே !
மாறுகின்ற காலநிலையிலே
மண்ணுலகில் மாறாத
கண்முன் தோன்றும் கடவுளே !
விண்ணுலகின் வியன்பொருளே !
சாதிக்கப் பிறந்தவன் என்றே
சாதிக்க வைத்தவனே ! தன்னைச் சுருக்கிக்
கொண்டு என்னை வளர்த்த தகைமையே !
தாறுமாறாய் வீசலாம் புயற்காற்றும் சுனாமியும் .
தடையில்லாமல் வீசிடுமே அன்பின் தென்றலும் !
உழைப்பினையே கற்றுத் தந்தாய் !
உறுதியுடன் வாழ வைத்தாய் !
தழைக்கின்ற தரிசுகளும் பேசும்
தந்தையே அகராதி என்ற சொற்பதத்தை !
ஆக்கம் :- கவிச்சிற்பி . சரஸ்வதி பாஸ்கரன்