சதுரங்கம்

எனக்கும் என் வாழ்க்கைக்குமான
சதுரங்க விளையாட்டில்
எப்போதும் தோற்பது நான் தான்!

சகலவித திட்டங்களோடும்
என்னை தோற்கடிக்கவென்று
காய் நகர்த்துகிறது வாழ்க்கை!

எந்த திட்டமும் இல்லாமல்
இழந்து கொண்டே இருக்கிறேன்
ராணியையும், ராஜாவையும்!

சிப்பாய்களை வைத்தே
என்னை வெல்லும்
திறமை கொண்டது
என் வாழ்க்கை!

குதிரையின் வலிமையையும்
யானையின் பலமும்
புரிவதே இல்லை எனக்கு!

குதிரை, யானை,
மந்திரி, ராணியென
ஒவ்வொன்றையும் இயல்பாய்
வெட்டுகிறது வாழ்க்கை!

ராஜாவை நகர்த்த
முடியாமல் போவதே
என் வாடிக்கை!

கருப்பு வெள்ளை
கட்டங்களால் ஆன
இந்த சதுரங்க விளையாட்டில்
என் வாழ்க்கை தோற்கும் போதுதான்
என்னால் வெல்ல முடியும்!

எழுதியவர் : தங்கராஜா. ப (19-Jul-11, 2:00 pm)
சேர்த்தது : தங்கராஜா
பார்வை : 1456

மேலே