நிலவன் - என்னவன் தான் என

நிலா ஆணா ?
என கேட்கிறார்களே
"ஆமா அவர் என்
அத்தான் தான்" என
சொல்ல வேண்டியது தானே..

உன்னைப் பற்றி
ஓராயிரம் கவிதை சொல்வேன்
என்னைப்பற்றி நானே
சொல்லிக் கொள்ள
வெக்கப் பட்டுத்தானே
வெலகி ஓடுறேன்
என் மாமனுக்கு
தற்புகழ்ச்சி புடிக்காது என
சொல்ல வேண்டியது தானே..

"நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லியப் பூ கொண்டு வா"
மழலை மொழியில்- நீ
பாடிய போதே
மஞ்சணத்திப் பூவ
பறிச்சு வந்து மல்லியப் பூவின்
வாசம் கொடுத்தேனே- அது
உனக்கு நினைவில்லையா..?

உன் மஞ்சள் நீராட்டின் போது
இங்கே என்னடா பார்வை ?
என்பது போல் நீ முறைக்க
மேகக் கூட்டத்தில்-நான்
மறைந்து கொண்ட பின்
மஞ்சக் குளிச்சத மறந்துட்டியா..?

மொட்ட மாடில நின்னு
அங்க யாருகிட்டடி பேசுறனு
உன் அம்மா கேட்டதுக்கு
"தோழி" கூடத் தான் மா'
குசும்பாய் நீ பொய் சொல்லி
கண்ணடித்து சிரித்தாயே..
ஐடியா நல்லா இருக்குனு
அப்படியே இருந்துடுவேன்னு
நினைச்சிட்டியா..?!

காதலுக்கு தூது செல்ல
காதலனையே 'தோழியா'
தூது அனுப்புவியா? என
கேலி பண்ணி நான் சிரிக்க
கேலி போதும் எங்க அண்ணன்
"சூர்யா"க்கு விசயம் தெரிஞ்சு
பகல் முழுதும் உன்னத்தான்
கொலைவெறியோட தேடி
அலைஞ்சான் னு நீ அழ
"ஆள் இல்லாத நேரத்துல
உன் அண்ணன் உதார் விட்டு
அலைஞ்சானே" - இப்ப
வர சொல்லுடி என்றதற்கு
வேண்டாம் என் அண்ணன்
பாவமுனு பல்லக் காட்டுனியே
மறந்துட்டியா..?

நாளைக்கு பொண்ணு கேட்டு
வரேனு சொல்லிட்டு வந்தேனே
நாளை காலை வரைக்கும்
காத்திருக்க முடியாது
இன்னைக்கு இராத்திரியே
வான வேடிக்கையோட-என்
நட்சத்திர மச்சானுங்களோட
வர்றேன்டினு சொன்னேனே
நினைவில்லையா..?

என்ன உனக்கு குடுப்பாங்களா
என ஏக்கமாய் நீ கேக்க
எல்லாம் நல்லபடியா முடியும்
"வாயிலயே வடை சுடுற
உன் வீட்டுக்காரங்க சம்மதத்தோட உன்னக்
கட்டிட்டு போயி குடு குடு கிழவியாக ஆனாலும்-நீ
சுட்டு போடுற வடை பாயாசம்
உன் கையால சாப்புடனும்"னு
சொன்னதும்"...
எப்படி எப்படி?
என சிரித்து கொண்டே நீ
கேட்க ஸாம்பிலுக்கு நான்
காட்டிய உருவத்த ஊரே பார்த்து
கதை சொல்லித் திரியுது..
கடன்காரி நீ மட்டும் வாய
திறக்க மாட்டேங்குற...

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (28-Jun-17, 10:14 am)
பார்வை : 243

மேலே