காலம் கொடுத்த பரிசு..
இலக்கியங்கள் கற்று தந்த காதல் இல்லை இது....
இயல்பாக என்னுள் நுழைந்தவன் தான் நீ.....
பருவம் தந்த குழந்தையாய் நீ...
அடிக்க மறுக்கும் தாயாய் நான்...
வருடிய தென்றலில் கையில் கிடைத்த மயிலிறகாய் ....
வாடிய நேரத்தில் தலை வருடும் அழகிய உறவாய்...
கவியின் தலைவனாய் என பருவங்கள் பல கொடுத்தேன்..
நொடியில் பிறந்த காதலை அழிக்க காலங்கள் போதவில்லை எனக்கு......