என்னதான் ஆச்சு

"லக்ஷணா,,,! என்ன இது? எதுக்கு இப்படி எல்லாம் பேசறே? நீ டென்ஷன் ஆகக்கூடாது... ரிலாக்ஸாக இருக்க சொல்லிருக்கா... நீ இப்படி உணர்ச்சி வசப்பட்டு இருந்தால் எப்படி? " கார்த்திக் மிகவும் நிதானமாகப் பேசினான்...

" கார்த்திக்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு... ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நியூஸ்.... நீங்களே பார்க்கறீங்க.... சின்ன சின்ன பொம்பள பசங்களைக் கூட. சே... என்ன இது? கேவலமான மனுஷங்க...? எப்படி இந்த புத்தி அந்த ஆண்களுக்கு? பொம்பளைங்க என்ன விளையாட்டு பொருளா? " திரும்பவும் உணர்ச்சி வசப்படவே கார்த்திக் " ஏய்.. இனிமேல் நீ இந்த நியூஸ் சேனல் அண்ட் தேவையில்லாத ஆப்ஸ பார்த்தியான எனக்கு கோபம் வரும்... நல்ல லைட் மியூசிக் உனக்கு பிடிச்ச எம். எஸ். பாட்டுக்களை நிறைய கேளு... இப்பவே அது மாதிரி கேட்டால் தான் நமக்கு பிறக்க போகிற குட்டி நல்ல ஒரு மியூசிக் ஞானம் நிறைஞ்சு பிறக்கும்... புரிஞ்சுதா? "


"உம்ம் ! எனக்கு பெண் குழந்தையே வேண்டாம். .. பயமா இருக்கு. அதை கட்டி காப்பாத்தறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை. .. ஒரு சிங்க குட்டியைத்தான் பெத்துக்கப் போறேன். .." லக்ஷணா கூற " என்னடி இது? ஏன் இப்படி இருக்கே? படிக்காதவங்க பேசறாப்போல இருக்கு. .. ஒரு பெண் குழந்தை குடும்பத்திலே பிறந்தால் லட்சுமி கடாக்ஷம்னு சொல்லுவா. .. தெரியாதா? எங்கயோ தப்பு நடந்தால் ? " கார்த்திக் பேச தடுத்தாள் லக்ஷ்ணா

" எங்கயோ இல்லை கார்த்திக்... நம் கண் முன்னாலே... தினம் தினம்... கொடூரம்... இதுக்கு தீர்வு இல்லையே..." பொருமினாள்.

" லக்ஷணா..! அமைதியா இரு... முதல்ல இந்த பாலை சாப்பிடு... வா... கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வரலாம்... அப்புறம் பேசலாம்... மனசை லேசா வெச்சுக்கோ... அப்புறம் அந்த எல்லோ கலர் சாரி பிடிச்சிருக்குனு சொன்னியே நாளைக்கு சீக்கிரம் வருவேன்... கடைக்கு போய் வாங்கி வரலாம்... இப்போ கிளம்பு..." கார்த்திக் அவ கையை பிடித்து தூக்கினான்...

" என்ன இவ? இப்படி டென்ஷனா இருக்கா? சே... இந்த மீடியா வேற... எப்ப பார்த்தாலும் போட்டதையே போட்டு நம்மை பாடாய் படுத்தறது... எப்போதும் ஒரு விவாத மேடை வேற. ...இவளை. எப்படியாவது டைவர்ட் பண்ணனும்...யோசிப்போம்.." மனதிற்குள் ஆழ்ந்து நினைத்துக் கொண்டான் கார்த்திக்...

மறுநாள் லக்ஷனாவிற்கு பிடித்த பாடல்களை டவுன்லோட் செய்து அவளிடம் கொடுத்தான்.. .பெண் குழந்தையின் விசேஷத்தை விளக்கும் படங்கள், கூறும் படங்களை டவுன்லோட் செய்து அவளுடன் கூட அமர்ந்து இவனும் பார்த்தான். ... அவள் மனதில் இருக்கும் பயத்தை முதலில் போக்க வேண்டும் என முடிவு செய்தான். ... ஆண்களை நல்லவர்களாய் சித்தரிக்கும் பல நிகழ்ச்சிகளை போட்டுக் காண்பித்தான். ..

ஒரு வாழ்வில் பெண்ணின் முக்கியத்துவத்தை விளக்கும் படங்களை ஆவலுடன் உட்கார்ந்து ரசித்தான். ..

ஒரு வாரம் கழித்து ஒரு நாள். .. " கார்த்திக். .. இந்த பொம்மு குட்டி போட்டோ பாருங்களேன். .. எத்தனை அழகா இருக்கு.... நேத்திக்கு ஒரு புது டிரஸ் பார்த்தேன் ஆன்லைன்ல ... ஒன்னு ஆர்டர் பண்ணட்டுமா ? என் குட்டி ராசாத்திக்கு ? சந்தோஷமாய் கூறிய லக்ஷனாவை புருவம் உயர்த்தி பார்த்து லேசாய் அணைத்துக் கொண்டான் கார்த்திக். ..

சுபம். ..

எழுதியவர் : மைதிலி ramjee (2-Jul-17, 4:29 pm)
பார்வை : 478

மேலே