உண்மையை அறிகிறது உத்தமரின் யோகம்
பொய்யும், களவும் தாண்டவமாடும் திருடர்களின் கூடார அரசியலைக் கொளுத்த விரைகிறது காலம்...
நல்ல மனங்களுக்கிடையே நெருக்கமாகப் பிணைக்கிறது அன்பென்னும் பாலம்...
உயிர்களுக்கு உணவாய் இடப்படுகிறது அரிசி மாவுக் கோலம்...
அழுக்காறும், அகந்தையும் உடன்வர தோன்றி அலைக்கழிக்கிறது பேராசையென்னும் மலம்...
அரசாங்கம் பாடுகிறது பிச்சைக்காரனின் இராகம்...
உண்மையை அறிகிறது உத்தமரின் யோகம்...
ஏழைகளின் மனதில் குடியேறிக் கொண்டிருக்கிறது ஆடம்பரத் தாகம்...
வேண்டாம் இந்த உலகின் மோகம்...
கண்மூடித்தனமாய் உலகின் மோகத்தைப் பின்பற்றினால் விளைகிறது பாதகம்...
அவரவர் சுயநலம் கலந்த சிந்தனையோ அவரவருக்கு சாதகம்...
சாதகமான நிலையே உலகில் வளர்ந்து வருகிறது பூதகமாய்...
இளக்காரமாக எண்ணிவிடாதே உண்மையின் தரிசனத்தை...
அவ்வாறு எண்ணினால் உனக்கே ஏற்படும் பேரிழப்பு...
அதன்பின் மனம் குமுறி தவியாய் தவிப்பாய் எரியும் நெருப்பில் சிக்கிய உயிருள்ள சிதையாய்...
நித்தமும் பல நிதர்சனம்...
காண இயலாநிலையில் வாழுகிறது இந்த பாழும் சனம்...
தானத்தில் மேலானது நிதானம்...
நிதானம் கொண்டால் அதுவே வாழ்வின் ஞானம்...