எல்லாமே நீ தான்

எல்லாமே நீ தான்

வார்த்தைகளுக்குள் அடக்க முடியாமல் திணறுகின்றன
என் கவிதைகள் உன்னை பற்றி நான் எழுதும் போதெல்லாம்
என் சொல்லளவை விட உன் கொள்ளளவில் பல்மடங்கு
பெருகித் தெரிகிறாய் நான் உனைப் பார்க்கும் போதெல்லாம்
மீட்டும் போது பற்பல இசை கோலங்கள் தரும் மரகத வீணை போல்
ஆகின்றாய் திசை மாறி உன்னை நோக்கும் போதெல்லாம்
வரிகளுக்குள் அடங்காத வடிவுதேச வனப்பி நீ
சொல்லுக்குள் சிக்காத சொர்க்கநீர்ப் பிரவாகம் நீ
எல்லாம் நீ எதிலும் நீ என்றும் நீ எனக்கு நீ

ஆக்கம்
அஷ்ரப் அலி


Close (X)

5 (5)
  

மேலே