உணவில்லா கொடுமை

உணவில்லா கொடுமை

நீண்ட ஆயுளை தந்தாய்
நீங்காத பசியையும் தந்தாய்
நிலையான வறுமையை தந்தாய்
நிலையில்லா உறவை தந்தாய்
நிதியில்லா வாழ்க்கையை தந்தாய்
நிற்கதியால் உறைந்து நின்று கண் மூடி
உணவிற்கு நீளும் கரங்களை தந்தாய்
என்னை படைத்து காப்பது நீயானால்
இதற்கு ஒரு முடிவையும் நீயே சொல்வாயே !!!

எழுதியவர் : கே என் ராம் (9-Aug-17, 2:10 am)
பார்வை : 105

மேலே