அதிசயங்களும் அவளும் --- முஹம்மத் ஸர்பான்
நீ தலை சாயும்
நொடிகளில்
பைசா கோபுரம்
உன் கூந்தலில்
உராய்வு விசை
தொடுக்கின்றது
வெண் மதியை
ஊடகமாக்கி
உற்பத்தியான
என்னவளின்
முகப்பருக்கள்
தாஜ்மஹாலின்
வெள்ளை நிறம்
உன் மூக்கின்
முக்கோண
வடிவத்தில்
அதிசயமான
பிரமிட்டின்
அழிவு காலம்
ஆரம்பிக்கிறது
உன் விரல்கள்
கருங்கல்லில்
பட்ட போது
அஜந்தாவும்
உன் காலுக்கு
கொலுசுகள்
நீட்டுகின்றது
இறந்து போன
தொல்பொருள்
ஓவியங்கள்
இருத்தியோரம்
நூற்றாண்டில்
என் அழகியால்
மீள் பிறக்கிறது
ஏழை வாழ்வில்
உன் கண்களின்
அழைப்பிதழ்கள்
கிடைத்த போது
குடிசை வீட்டில்
நிலவு உறங்கும்
பெளர்ணமியில்
கவிநதி பிறந்தது