அந்த பிருந்தாவனத்தில் ஓர் மூங்கில்

அந்த பிருந்தாவனத்தில்
ஓர் மூங்கில் . . . . .

அவன் சலங்கை ஒலி வரும்
திசை நோக்கி
ஒற்றைக் காலில்
தவம் செய்வதாய் . .

அவன் தனை
நெருங்க மாட்டானா?
ஏக்கத்தில் . . .
உயிர் காற்றை கக்கி
பெருமூச்சொரிவதாய் . . .

அவன் தனைக் கடந்த
விரக்தியில்
தளை உதிர்த்து
முகம் தொங்கி
நிலக்குத்திட்ட
பார்வையிலே . . .

அவன்
காலடி தடத்தை
தன் நிழலில் கண்ணுற்று
புழகாங்கிதத்தில் பூரித்து . . .

அவன்
எங்கே என்று
ஏக்கப்பார்வையை
நிழலாய் அவன்பின்
விரட்டி . . .

அங்கே
அவன் வரவுக்காய்
உயிர்தாங்கி
தன் உடலத்தை - அவன்
மடிசாய்த்து
அவன் கை துளைத்த
நெஞ்சத்தை
மூச்சுக்காற்றால்
நிரப்பி . .
சுரமாகிப் போகிறது
பிறருக்காய் ஜீவித்திருக்கும்
சில ஆத்மாக்களாய் . . .
அந்த கண்ணன் கை
குழல் ஆகும் முன் . . . .

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (15-Aug-17, 8:45 pm)
பார்வை : 72

மேலே