பாடல்

கவிஞர் தஞ்சை வாசன் விருது பாடல்

பல்லவி :-

தினம் தினமும் ரசித்தேன் கனவு வந்ததே /
எனை விட்டு எந்தன் நெஞ்சம் போனதே /
என்னில் ஏனோ உள்ளம் இல்லை /
கனவு போல ஏதும் இல்லை /
என்னில் ஏனோ நானே இல்லை /
கனவு போல ஏதும் இல்லை /
எங்கே எந்தன் நெஞ்சம் கண்ணே
உன்னில் இணைந்ததா /

( தினம் தினமும் ரசித்தேன் கனவு வந்ததே / )

சரணம் -- 1

பந்தமுடன் இதோ இங்கே தான் /
நான் எந்தன் உயிரினை நேரினில் பார்த்தேன் /
கண்மணியே உயிரே உன்னால் தான் /
கனவுகள் மீதொரு மோகம் கொண்டேன் /
இமைக்கின்ற போதே உன்னை நினைக்க வைத்தாய் /
இதயத்தை நீதான் இணைக்க வைத்தாய் /
படிப்படி யாகவே என்னுள் வந்தாய் /
இமைக்கின்ற போதே உன்னை நினைக்க வைத்தாய் /
என் காதல் என்னுள் என்றும்
சுகம் ஆகுமே சுகம் ஆகுமே /

(தினம் தினமும் ரசித்தேன் கனவு வந்ததே / )

சரணம் -- 2

உலக அதிசயம் எட்டாய் ஆகாதோ /
நான் கொண்ட நேசத்தின் வலிதனை பாட /
மேனி எங்கும் உணர்வுகள் தோன்றாதோ /
நீ என்னை தொடுகையில் மோகத்தை மூட /
நெஞ்சமும் என்னுள்ளே துடிக்கவில்லை /
இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்ததில்லை /
நெஞ்சமும் என்னுள்ளே துடிக்கவில்லை /
இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்ததில்லை /
நான் ரசித்த நேரம் எல்லாம் நீ தந்தது
நீ தந்தது /


தினம் தினமும் ரசித்தேன் கனவு வந்ததே /
எனை விட்டு எந்தன் நெஞ்சம் போனதே /
என்னில் ஏனோ உள்ளம் இல்லை /
கனவு போல ஏதும் இல்லை /
என்னில் ஏனோ நானே இல்லை /
கனவு போல ஏதும் இல்லை /
எங்கே எந்தன் நெஞ்சம் கண்ணே
உன்னில் இணைந்ததா /

( தினம் தினமும் ரசித்தேன் கனவு வந்ததே /
எனை விட்டு எந்தன் நெஞ்சம் போனதே /)


சரஸ்வதி பாஸ்கரன் , திருச்சி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Aug-17, 6:16 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : paadal
பார்வை : 82

மேலே