கடந்துவிட்டாய்
நீ மட்டுமே ,
நினைவில்
நகரும் இந்த நாட்களில்,
விழிகளே குளமாய் ,
வலிகளே வரமாய் - ஒரு
வாழ்க்கை .
விலகித்தான் நிற்கிறாய்!
விதைகளை
விதைத்தது எப்போது .
எதற்கு போராடுகிறேன்
என்று அறியாமலே
போர்களத்தில் நான்.
நீயோ !
அறிந்தும் அறியாமலுமாய்
கடந்துவிட்டாய்,
என்னையும்
எனதன்பையும்.