பழம் நழுவி
உன்
ஆதிக்கத்தின்
அழுத்தம் தாங்காமல்
விரியும்
கவிதைகள்.
உன்னையும்
உன் நினைவாதிக்கத்தையும்
என்
கவிதைகள் அரிய
வாய்ப்பில்லை தான்.
உனக்கும்
தெரியவில்லை
எனும் போது தான்,
மனம் நழுவி
மீண்டும்
கவிதையில்
விழுகிறது.
- லக்ஷ்மி பாலா