என்னுயிரே என் தமிழே

என்னுயிரே என் தமிழே
உளம்நாடும் உறவினிலே
உறவாடும் தேன் தமிழே
உருகுகின்றேன் உன்னழகால்
உடன் வருவாய் தெள்ளமுதே

அலை போல தென்றலுடன் அசைந்துவரும்.தேரழகே
கலை போன்ற நெஞ்சினிலே
கலந்தாட வா தமிழே

பரிவாக எனை அணைக்கும் பைந்தமிழ் தாயமுதே
பனிதுளிபோல் தீண்டி நிற்கும்
கொஞ்சுமெழில் குலமலரே

வெண்மதியும் வதனமென
விணமலரை தூவி நிற்க
மான் போல நடையெடுத்து
விரைந்தோடி வா தமிழே

கதிரெல்லாம் அசையுமந்த
ஒயிலான தேரழகே
கவிபாடும் நல்மனதில்
கரையாமல் வா தமிழே

கதை பேசும் நெஞ்சினிலே
சிரித்தாடும் சிங்காரமே
கீதம் பாடும் நெஞ்சினிலே
குதித்தோடும் தேனூற்றே
நான் பாடும் கவிதையிலே
குதித்தாட வா தமிழே

எழுதியவர் : சௌம்யா செல்வம் (17-Aug-17, 12:00 pm)
பார்வை : 323

மேலே