தொடர்ந்தே வருகிறது

எவ்வளவோ துரத்தியும்
எங்குபோய் ஒளிந்தும்
தப்பாமல் என்னை
தொடர்ந்தே வருகிறது
உன் நினைவலைகள்
என் நிழலாய் ....!

ஒருவாறு எனக்குள்
ஏதேதோ பேசிமுடித்து
உன் நினைவுகளை
விரட்டி விட்டதாய்
பெருமூச்சு விட்டு
சாய்ந்து அமர்கிறேன்
அந்த கடற்கரையில்

சிலநொடி இடைவெளியில்
சடாரென ஓடிவந்து
கால்களை நனைத்து
மெல்ல நகைத்து
சொல்லுது அலைகள்
அதுபோலவே நீ வந்து
ஒட்டிக்கொள்கிறாய்
என்னில்

விரும்பாமல் வருந்தி
நான் துரத்துவதும்
திரும்பி தவறாமல்
நீ வருதலும்
தொடருகின்றன

எழுதியவர் : யாழினி வளன் (17-Aug-17, 8:41 pm)
பார்வை : 131

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே