வேண்டாம் வன்முறை
செம்மண்ணில் பூத்த வெண்ணிற பூக்கள்
அம்மண்ணுக்கு போரிட்டு செந்நிறம் ஆவதுவோ
பயிர்கள் வாழ தண்ணீர் பாய்ந்த பூமியிலே
உயிர்கள் வாடி செந்நீர் பாய்வதுவோ
"அவன் இடம் காக்க என்னை கொன்றான்.
ஏன் இனம் காக்க ஏன் செய்வேனோ?"
என இன்றும் கேட்கிறது ஈழத்திலே,
கடலலை ஓசையில் உயிரலை ஓசைகள்.
வேண்டாம் வன்முறை