காதல்
பூக்களமான என் தேகம்
போர்களமாய் தொடங்கியது ..
உன் மெல்லிய தீண்டலில் ..
ஒவ்வொரு நொடியும்
என்னை இழக்காமல் ,
இழந்து கொண்டு இருக்கிறேன்..
உன் தீண்டலில்..
கடலை விட்டு வெளியேற
துடிக்கும் அலையாய்
மனது தவிக்கிறது ...
ஆனால்
தன் நிலை இழந்த
அலையாய் மீண்டும்
உன்னில் கரைய ஆரம்பிக்கிறேன்
உன் தீண்டலில்..
ஒரு சிறு தீண்டல்,
என்னுள் .....
ஓராயிரம் ரசாயன மாற்றம் ..
நெருங்கவும் முடியாமல் ...
விலகவும் முடியாமல் ...
தவிக்கிறது என் பெண்மை ..
உன் தோள் சாயும் நேரம்
உலகம் அப்படியே நின்றுவிட
ஒவ்வொரு நொடியும்
கேட்கிறது
என் காதல்
'