கூண்டுக்குள் மனிதர்கள்

கூண்டுக்குள் அரிமாவை அடைத்து வைத்து அறியாமையால் தானே அரிமாவென்று மார்தட்டும் மனிதர்களை நோக்கி அரிமா கேட்கிறது கூண்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது நானா? நீங்களா? என்று...

துர்குணக் கூண்டுக்குள் மனமானது உலாவிக் கொண்டிருக்க, சுதந்திரம் பற்றி பேசும் தகுதியில்லாது நம்மில் விவாதிக்கிறோம் அரசு, அதிகாரம், நாடு, அரசியல், சட்டம், நீதி, நியதியென்று...

இம்மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகளின் நாற்றத்தைச் சகிக்க முடியவில்லை, நரமாமிசம் உண்ணும் அரிமாவின் வாய் நாற்றத்தை விட அதிகமாகி இருப்பதாலே...

அறவழி அறியாது ஆண்டவனைப் பூக்களைக் கொண்டும் வாசனைத் திரவியங்களைக் கொண்டும் பாலாபிஷேகம் செய்து பூசிப்பதினால் எப்பயனும் விளையப் போவதில்லை மாந்தர்களே...

உயிர்களை வாழ்விக்கும் இயற்கையை காப்பதே முதல் தர்மம்...
மற்றவை முக்கியத்துவம் அற்றவை...

உண்மை பரம்பொருளால் உருவாக்கப்பட்ட இயற்கையே நம் உடைமைகளென்று உணராமல் இயற்கையை அழித்து செயற்கையை உடைமைகளாய் கொண்டு வாழ்வதே நம் பலவீனம்...

நோயற்ற வாழ்வை வேண்டினால் நல்ல மரங்களின் விதைகளை நிலத்திற்குள் புதைத்து நீருற்றி வளர்ப்போம்...
அதுவே கடவுள் வழிபாட்டைவிட நிம்மதிதரும் செயலாகும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Aug-17, 6:18 pm)
பார்வை : 1061

சிறந்த கவிதைகள்

மேலே