புது மனை புகு விழா
புது மனை புகு விழா
எங்கள் உறவுகளின் இணைப்பு விழா
எங்கெங்கோ இருந்த பந்தங்களை அறிமுகபடுத்திய விழா
புத்தம் புது உடைகள் உடுத்தி
இனிய புன்னகை தழுவி
நெஞ்சார இரு கை கூப்பி
அனைவரையும் வரவேற்று
புண்ணிய அர்ச்சணைகள் கூறி
பசும்பால் பொங்க
தீயதை பொங்க விட்டு
நல்லன உள்ளே புகுத்தி
பந்தங்கள் மனதால் வாழ்த்த
அன்பென்னும் புதுமனையில் புகுந்தோம்