இரவில் ஒரு நாள்

நீண்ட இரவில்
இருட்டு அறையில்
வீடு முழுதும்
தேடி தேடி
வீதி வரை வந்தும்
கிடைக்கவில்லை
தடுமாறி விழ
கையில் கிடைத்த
தீப்பெட்டியில் இருந்த
தீக்குச்சி உரசி உரசி
கடைசி குச்சியில்
கிடைத்த ஒளியில்
கண்டு பிடித்தேன்
என் பின்னால்
மறைந்திருந்த
என் நிழலை

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (25-Aug-17, 11:18 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : iravil oru naal
பார்வை : 193

மேலே