மரணம்

படித்து படித்து பட்டங்கள் பல பெற்று
பட்டங்களாலே பதவிகள் பல வகித்து பாடுபட்டு சேர்த்த பொருளும் காலனவன் வரும் போது காப்பாற்றிடுமோ?

ஞாலத்தில் பலர் அடங்க அதிகாரம் தொனிக்கும் அரசனாய் வாழ்ந்தாலும்
உயிர் கூடுவிட்டு போன பின்னே ஆட்சியேது?
அதிகாரமேது?

தென் சொட்டு வார்த்தைகளாலே ஊரறிய பல பகுத்தறிவுகளை விதைத்து பெரும் புகழ் பெற்றாலும் உடல் விட்டு உயிர் ஓட நேரம் வந்துவிட்டால் அதை தடுத்திடத் தான் வழியறியுமோ பகுத்தறிவு?

ஓயாத ஓடல்களுக்கு மத்தியில் விடையில்லாத் தேடல்களுடன் முடிவடையும் உலக வாழ்வில் அடைத்தே தீர வேண்டுமென்று பற்று கொள்ள ஏதுமில்லை ஞானப்பெண்ணே...

வாசனைத் திரவியங்களுடன் மாவையும் தான் பூசி,
தழுக்கி, குலுக்கி, பளபளவென உடலழகை ஏற்றிக் கொண்டாலும் உயிர் பிரிந்த உடலழகுக்கேது உயிர் ஞானப்பெண்ணே??

பெண்ணென்பார்..
ஆண்ணென்பார்...
இரண்டும் கலந்த கலவையென்பார்...
மரணம் வந்தபின் பகுப்பேது ஞானப்பெண்ணே?...

உயிருள்ளவரை உணராது தாலாட்டாது செத்தபின்னே அப்பா, அம்மா என்னே ஒப்பாரி??

மரண சாசனங்களை எடுத்து படிக்கிறேன் ஞானப்பெண்ணே என் மரணம் எப்பொழுதென்ற தேடலோடு...

தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்ல...
செத்தபின் சமாதிக்கு பால் வருமா???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Aug-17, 6:41 pm)
Tanglish : maranam
பார்வை : 2289

மேலே