கவிதை
நான் பேச நினைக்கும் போதெல்லாம் அவள் பேசி விடுகிறாள்,
என் இதயம் அவளால் ஈர்க்கப்பட்டது என்பதை அவளுக்கு உணர்த்த நினைத்தேன் வாய்ப்பு கிடைக்கவில்லை ,
பல நாட்களாகியும் என் இதய அறைகள் பூட்டிக்கிடக்கின்றன,
சாவியை எங்கோ தொலைத்துவிட்டு தேடுகிறேன்,
தொலைந்த சாவியை கொண்டு வந்து கொடுக்கிறாள் என்று ஏமாந்துவிடுகிறேன்,
பிறகு தான் தெரிகிறது அவள் கொடுத்தது சாவி அல்ல கல்யாண பத்திரிகை என்று ,....