இயற்கை
செங்கதிரோன் மறைகின்ற வேளை தன்னில்
..... செவ்வானில் வானவில் லைநான் கண்டேன்
அங்குமிங்கும் பறக்கின்ற பறவைக் கூட்டம்
..... அழகான மலைகளின் காட்சிக் கண்டேன்
எங்குநான் பார்த்தாலும் இயற்கை காட்சி
..... இன்பத்தை அள்ளிதரும் இந்தக் காட்சி
பொங்குகின்ற அழகினை விட்டு என்னால்
..... போகவே மனமில்லை என்ன செய்வேன்?
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்